போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீது வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 13, 2020

போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீது வழக்கு


திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு நடத்து வருகிறது. அம்மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்ய தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியராக 425 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக 7 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.

பின்னர், பணி நியமன உத்தரவு பெற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்வி சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தது.


பணி நியமனம் பெற்றவர்களில் 11 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், 10 பேர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகும்.

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன்லால் நாத் கூறிகையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 362 பள்ளிகளில் 425 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில் 1 ஆசிரியர் மேற்கு திரிபுரா மாவட்டம் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்.



 மற்ற 11 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது அவைகள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், 10 பேர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். போலி சான்றிதழ்களை வைத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.


அரசு வேலைக்கு சேர்பவர்களை ஒளிவுமறைவு இல்லாமல் தேர்வு செய்ய தீர்மானித்து இருக்கிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment