ராஜஸ்தானில் இனிவரும் காலங்களில் பிப்ரவரி 14ம் தேதி என்பது பெற்றோர்களுக்கு பூஜை செய்யும் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகமெங்கும் உள்ள காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கலாசார விதிமீறல் என பல இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டம் நடத்துவதும், காதலர்களை துன்புறுத்துதலும் வழக்கம்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு பதில் அன்றைய தினத்தை பெற்றோருக்கு பூஜை செய்யும் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் தினத்தன்று பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு பூஜை செய்யவும், பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோருக்கு பூஜை செய்யும் தினம் என காலண்டரில் சேர்க்கவும் அம்மாநிலத்தில் அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment