அனைத்து கல்லூரிகளிலும் நாள்தோறும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 13, 2020

அனைத்து கல்லூரிகளிலும் நாள்தோறும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்

மகாராஷ்டிராவில் இனி அனைத்து கல்லூரிகளிலும் நாள்தோறும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 இதுகுறித்து புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உயர்க்கல்வித்துறை அமைச்சர் உதய் சாமந்த், சில நாட்களுக்கு முன் நாங்கள் தேசியகீதம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்திருந்தோம். இதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்குவதற்கு ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள் பணி நாட்களில் தொடங்கும்போதும்,

 அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும்போதும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதற்கான அறிவிப்பு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளான 19ம் தேதி வெளியிடப்படும்.

இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதையடுத்து, வருகிற 20ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாள்தோறும் தேசிய கீதம் கண்டிப்பாக பாடப்பட வேண்டும்.


 மகாராஷ்டிராவில் உயர்க்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விகள் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 20 லட்சம் ஆகும். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் நாட்டுப் பண் இசைக்கும்போது அவர்களின் தேசப்பற்று அதிகரிக்க இயல்பாகவே வாய்ப்பு உருவாகிவிடும், என்று கூறியுள்ளார்.



மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பதை சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கம் கடந்த மாதம் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment