விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? கணக்கு ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 13, 2020

விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? கணக்கு ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் தாய், தந்தையர் விபத்தில் இறந்துவிட்டால் வழங்கப்படும் நிதியை கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்கள் மற்றும் செலவிட்ட கணக்கு விவரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது.


இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் தாய், தந்தை அல்லது பாதுகாவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டால், மாணவர்களின் கல்விச் செலவை கவனிக்க அரசே ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 முதல் ரூ.75 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலம் கல்விச் செலவுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.



இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடரந்து தற்போது பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்க கல்வித்துறையும் கணக்கு கேட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளன.


 அதில் கூறப்பட்டுள்ளதாவது:


 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துவிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டால் அதனால் பாதிக்கப்படும் மாணவ, மாணவியரின் கல்வி தடைபடாமல் இருக்க


அந்த மாணவர்கள் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கியில் செலுத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கின்ற வட்டித் தொகையில் இருந்து அந்த மாணவரின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவு மேற்கொள்ளப்படும் என்று கடந்த 2005ம் ஆண்டு அரசு அறிவித்து அதன்படி நிதியும் ஒதுக்கியது. 2014ம் ஆண்டில் மேற்கண்ட தொகை ரூ.50  ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2016-17ம் ஆண்டில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி இதற்காக செலவிட ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


கடந்த 2018ம் ஆண்டில் இந்த திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கியது போக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் பேரில் நிதி வழங்க கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை இயக்குநர்கள் அரசுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, தற்போது அதற்காக ரூ.4 கோடியே 70 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது.




இதையடுத்து கடந்த 2014-15 முதல் 2018-19 வரை இந்த  திட்டத்துக்கென ஒதுக்கிய நிதியை பெற, மாணவர்கள் அனுப்பிய விண்ணப்பங்களின் பேரில் வழங்கிய தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை போன்ற விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி அவற்றை  சரிபார்த்த பின்னர் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment