+1 , +2 பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் :தனிமைப்படுத்துதலே தீர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

+1 , +2 பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் :தனிமைப்படுத்துதலே தீர்வு


மேல்நிலை வகுப்பு பாடப்புத்தகத்தில், நோய்கள் சார்ந்த பாடத்தில், கொரோனா வைரஸ் குறித்தும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததும் குறிப்பிடப்பட்டுள்ளது

.இந்தியாவில் கொரோனாவை பரவாமல் தடுக்க, பலத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவே போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து, பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


பிளஸ் 1 பயாலஜி பழைய பாடப்புத்தகத்தில், வைரஸ் நோய்கள் குறித்த பாடத்தில், மனித கொரோனா வைரஸ் குறித்த படம் இடம்பெற்றுள்ளது.புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்தும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சிவானந்தா அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கதிர்வேல் கூறுகையில், ''பழைய பாடத்திட்டத்திலே, கொரோனா வைரஸ் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மைக்ரோபயாலஜி பாடத்தில், கொரோனா தொற்று இருந்தால், தனிமைப்படுத்துதலே பரவாமல் தடுக்கும், தீர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஆல்கஹால் கலந்த சானிடைசர், சோப்பு கொண்டு கை கழுவுவதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இதுசார்ந்த விழிப்புணர்வு உள்ளது,'' என்றார்.


No comments:

Post a Comment