கரோனா அச்சம் காரணத்தால் ஏராளமான மாணவர்கள் தேர்வுஎழுதாததால் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
முக்கியமான இத்தேர்வுகளை எழுத முடியாதது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் குறித்த அச்சம்தான் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம்.
சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளும், பிறமாநில பாடத்திட்ட தேர்வுகளும்ஒத்திவைக்கப்பட்ட நிலையில்தமிழகத்திலும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தவறான நம்பிக்கையில் பல மாணவர்கள் தேர்வுக்கு செல்ல தவறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
11-ம் வகுப்புக்குவேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை ஏராளமான மாணவர்கள் எழுதாத நிலையில் 11-ம்வகுப்பிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Yes.... 11 all pass
ReplyDeleteYes
ReplyDelete