144 தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்: புதுச்சேரி மாநில முதல்வர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

144 தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்: புதுச்சேரி மாநில முதல்வர்

புதுச்சேரியில் தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


கரோனா வைரஸ் தொற்று காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநில மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மக்கள் யாரும் தடை உத்தரவைச் சரியாகப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


இதனால், 144 தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment