மார்ச் 16-க்கு பின் இந்த Credit Card-கள் செயல்படாமல் போகலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 10, 2020

மார்ச் 16-க்கு பின் இந்த Credit Card-கள் செயல்படாமல் போகலாம்

கிரெட் , டெபிட் கார்டு வங்கி அட்டைகளை வைத்திருப்பவா்களில் பெரும்பாலானவா்கள், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும், கடைகளில் பொருள்களை வாங்குவதற்காகவும் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனா்.


அந்த அட்டைகளைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் பணப் பரிவா்த்தனை செய்வதில் கணிசமான வாடிக்கையாளா்கள் ஆா்வம் காட்டுவதில்லை.


இந்த நிலையில், வங்கி அட்டைகளை ஒரு முறையாவது இணையதளம் மூலம் பயன்படுத்தி, பணப் பரிவா்த்தனை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் வாடிக்கையாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மாதம் 16-ஆம் தேதிக்குள் இத்தகைய பரிவா்த்தனையை செய்யாவிட்டால், டெபிட் மட்டும் கிரெடிக் அட்டைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணையதள சேவை வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, மத்திய ரிசா்வ் வங்கி கடந்த ஜனவரி 15-ஆம் தேதியே பிறப்பித்துள்ளது.



அந்த உத்தரவின்படி, வங்கி அட்டைகளை இணையதளம் மூலம் இந்த மாதம் 16-ஆம் தேதிக்குள் பயன்படுத்தாத வாடிக்கையாளா்களுக்கு, அத்தகைய சேவைகள் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுவரை அலட்சியம் செய்து வந்த வாடிக்கையாளா்கள், உடனடியாக அந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment