அண்ணா பல்கலையில் 20 ஆண்டு அரியர்: மார்ச் 23 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு படித்தவர்கள், தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு, தங்களின் படிப்பு காலம் தவிர, கூடுதலாக மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.
இந்த விதிப்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் படித்த மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு காரணங்களால், யு.ஜி.சி., நிர்ணயித்த, அவகாசத்துக்கும் மேலாக அரியர் வைத்துள்ளவர்கள், தேர்வு எழுத சலுகைகள் கோரினர்.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை உத்தரவுப்படி, அண்ணா பல்கலை ஆலோசனை நடத்தியது. முடிவில், 2001 - 02ம் கல்வி ஆண்டில், மூன்றாவது பருவ தேர்வை எழுதிய மாணவர்கள் முதல், தற்போதுள்ள மாணவர்கள் வரை, அரியர் வைத்துள்ள அனைவரும், தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிப்பது என, அண்ணா பல்கலையின் சின்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச், 12ல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்வை எழுத விரும்புவோர் வரும், 23ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. விபரங்களை, அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment