தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டுப்பாடுகள் விதிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 23, 2020

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டுப்பாடுகள் விதிப்பு


தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து ஏடிஜிபிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 22 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம்.

*ஸ்கேனர் மூலமாக காவல் நிலையம் வருவோர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

*காவல்நிலையங்களில் இருக்கும் கிளப், மன்றம் ஜிம் ஆகியவை மூட வேண்டும்.

*காவல் நிலையங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கவேண்டும். அதில் உதவி எண்கள் கண்டிப்பாக அச்சிடப்பட்ட வேண்டும். பொது மக்களுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

*காவல்நிலையத்தில் இருக்கக்கூடிய சமூகநல கூடங்களில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது.

*காவல் நிலையங்களில் போலீசார் எந்த ஒரு கூட்டத்தை நடத்த கூடாது. துறைரீதியான கூட்டங்கள் தொடர்பாகவும், சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான கூட்டங்களையும் காவல் நிலையத்தில் நடத்தக்கூடாது.


தொலைபேசி வாயிலாகவோ, இமெயில் மூலமாகவும் , தபால் மூலமாகவும் இதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் .

*கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து காவலர்கள் பணியாற்ற வேண்டும், கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*காவல் நிலையத்தில் கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

*மருத்துவ குழுவினருடன் செல்லும் காவல்துறையினருக்கான கவச உடையும் வழங்கப்பட்டுள்ளது.

*போலீஸ் கேண்டினில் தொடர்பான விழிப்புணர்வு பதாகை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment