தமிழகத்தில் 2 வது கொரோனா பரிசோதனை ஆய்வகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 9, 2020

தமிழகத்தில் 2 வது கொரோனா பரிசோதனை ஆய்வகம்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது’’ என கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் 38க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சிறுவன் உட்பட இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் ஆயிரத்து 86 பேர்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்ய, இந்தியாவில் 52 ஆய்வுக் கூடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இதன் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் கொரோனா பாதிப்புக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் 2வது இடமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


 தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 10 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்ட லேப், சிறப்பு உபகரணங்கள் உள்ளன. தேவையான எண்ணிக்கையில் டெக்னீசியன்களும் உள்ளனர்.

அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கலாம் என தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. எங்தெந்த ஊர்களில் இருந்து மாதிரிகள் இங்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை.


 ஆனால் எங்கிருந்து பரிசோதனைக்கு வந்தாலும் நாங்கள் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட லேப், உபகரணங்கள், தொழில்நுட்ப பணியாளர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.


தென் மாநிலங்களுக்கு பாதிப்பில்லை: தென் கொரியா, அபுதாபி, சீனா போன்ற நாடுகளில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த 22 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

28 நாள் கண்காணிப்பிற்கு பின்னர் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் வெயில் வாட்டி வருகிறது. பகலில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியசை தாண்டி விடுகிறது.


கொரோனா வைரஸ் 27 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தாலே அழிந்து விடும். தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உயிர் வாழ தேவையான பருவநிலை  இல்லை. இதுவரை கொரோனா பாதித்துள்ள 108 நாடுகளிலும் பகலில் வெயில் இருந்தாலும், இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது.

 இந்தியாவில் இமயமலையை ஒட்டிய உள்ள மாநிலங்களில் மட்டுமே தற்போது இரவில் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் அங்கு பரவ வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பு இல்லை.


இருப்பினும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

தேனியில் ஏன்...?


தமிழகத்தில் சென்னை தவிர தேனி மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வைரஸ் தொற்றை கண்டறியும் நவீன லேப் உள்ளது. இங்குள்ள லேப்பில் என்ன வைரஸ் என கண்டறிவதுடன், அதன் தன்மை குறித்த முடிவுகளையும் கண்டறிய முடியும். குறிப்பாக டெங்கு வைரஸ் 4 வகைகளாக உள்ளன


. டெங்கு பாதித்தவர்களுக்கு எந்த வகையான வைரஸ் தாக்கியுள்ளது. அதன் பாதிப்பு தன்மை என்ன என்பதை கூட துல்லியமாக கண்டறியும் வசதிகள் உள்ளன.

இதனால் இந்த ஆய்வகம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிசோதனை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தவிர தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கேரளாவில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனியில் இந்த ஆய்வகம் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment