தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம் உதயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம் உதயம்


நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


 தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், நாகை மாவட்டம், ஒரத்தூரில், 367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் கடந்த 8-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகும் என்றார்.


இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று கொரோனா நிவாரணங்களை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மயிலாடுத்துறை தனி மாவட்டமாக உதயமாகும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment