ATM மூலமாகவும் பரவும் கொரோனா வைரஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 10, 2020

ATM மூலமாகவும் பரவும் கொரோனா வைரஸ்

சென்னை பல்கலைகழகத்தின் மருத்துவம் உள்ளிட்ட முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.


தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் பூச்சியியல் முதுநிலை வல்லுனர் மணிவர்மா பங்கேற்று கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.



இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடம் இருந்தோ, பூச்சிகளிடம் இருந்தோ பரவுவதில்லை என்று சுத்தத்தை பேணாத மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்று தெரிவித்தார்.

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விரல்களால் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவித்த மணிவர்மா, ஏ.டி.எம்.மில் பணம் மட்டும் அல்ல கொரோனா வைரஸ் கிருமியும் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதால் முன் எச்சரிக்கையுடன் கையாளுங்கள் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment