கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேர்வுகளை ஒத்திவைக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் கூட்டமாக எங்கேயும் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பயணங்களை தவிர்த்து மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது
.தற்போது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் காலம் என்பதால், தேர்வுகள் வழக்கமாக நடந்துவருகின்றன.
வகுப்புகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததன் எதிரொலியாக, வரும் 31-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் தொடர்பில் இருக்க வேண்டும், மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வுகள் மட்டுமல்லாது, நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒத்திவைக்க மானியக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்திலும் தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்துவருகின்றன.
மேலும் வரும் 27-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்க இருக்கின்றது.

No comments:
Post a Comment