நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ரூ.367 கோடி மதிப்பில் நாகை மாவட்டம் ஒரத்தூரில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் நாகை மாவட்டம் ஆகும் என்று பெருமிதம் கொண்டார்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நாகையை அறிவித்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது என்பதையும் முதல்வர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாகையில் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் உயர்கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலகமாக உள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி இல்லை
. காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.வேதாரண்யம் தாலுக்காவில் உணவு பொருள் பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது
. மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும்.புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் இருக்கும், என்றார்.

No comments:
Post a Comment