கொரோனாவை விட அது தொடர்பான செய்திகள்தான் பதற்றத்தை உண்டாக்குகிறதா..? எதிர்கொள்ளும் வழிகள் இதோ.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

கொரோனாவை விட அது தொடர்பான செய்திகள்தான் பதற்றத்தை உண்டாக்குகிறதா..? எதிர்கொள்ளும் வழிகள் இதோ..

உலகளாவிய தொற்றுநோய் என அறிவிக்கப்பட்ட இந்த கோவிட் 19 வைரஸ் ஒவ்வொருவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

எங்கு திரும்பினாலும் கொரோனா கொரோனா.., செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் என எங்கு பார்த்தாலும் கொரோனா செய்திகளாக உள்ளது.

இந்த கொரோனா வைரஸைக் காட்டிலும் வரும் செய்திகள்தான் பதற்றத்தை உண்டாக்குகிறது என ஆங்காங்கே வரும் புலம்பல் சத்தங்களைக் கேட்க முடிகிறது.


நிச்சயம் அந்த பதற்றம் இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். பதற்றம் மட்டுமன்றி மன அழுத்தம் அதிகரிக்கும். மனச்சிதறல்கள் உண்டாகும். வீட்டில் அடைபட்டிருப்பது தனிமையை உணர வைக்கும்.

 திடீரென யாருடனும் தொடர்பில்லாத நாட்கள் மனதை திக்குமுக்காட வைக்கும்.இருப்பினும் செய்திகளும், விழிப்புணர்வு சுவரொட்டிகளும் உங்களை எப்போதும் விழிப்புடன் வைத்துக்கொள்ளவும்,

தற்காத்துக்கொள்ளவுமேயன்றி வேறு எதுவுமில்லை. அதேசமயம் உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் செய்திகளும் இவைதான். இதை கட்டுப்படுத்தவும் முடியாதது. இந்த வைரஸின் தாக்கம் குறையும் வரை இது தொடரும். இந்த சமயத்தில் நாம்தான் நம் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். பதற்றத்தைக் குறைக்க என்ன வழிகள் என தீர்வு காண வேண்டும்.

இதற்கு உலக சுகாதார அமைப்பும் சில யோசனைகளை கூறியுள்ளது.


அதில் மக்கள் செய்திகள் பார்ப்பதைத் தவிருங்கள் என்கிறது. செய்தித்தாள், வானொலி கேட்பது அனைத்தையும் தவிருங்கள் என்று அறிவுறுத்துகிறது.

அதேபோல் அனைத்து ஊடகச் செய்திகளையும் பார்க்காமல் எது உண்மையான செய்திகளை தருமோ அதை மட்டுமே கவனியுங்கள். கொரோனா குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் கேட்டு தெரிந்துகொண்டு அதிலிருந்து விலகிவிடுங்கள் என்று WHO கூறியுள்ளது.


இந்த வைரஸ் குறித்து இன்னும் தெளிவான புரிதல் கிடைக்கவில்லை எனில் உங்கள் மருத்துவரை அணுகி அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அவர் தரும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள். இல்லையெனில் புரியவில்லையே என வதந்திகளை படித்துவிட்டு பதற்றமடையாதீர்கள். குறிப்பாக வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர்கள். அவற்றை மற்றவர்களுக்கும் பகிராதீர்கள்.

No comments:

Post a Comment