நியாய விலைக் கடைகளில் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பதைத் தவிா்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடைவெளிகளில் குடும்ப அட்டைதாரா்கள் நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுத்துக் கொள்ள நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை தீவிரமாகக் கண்காணிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் அந்தோணிசாமி ஜான் பீட்டா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
அனைத்து நியாய விலைக் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகளில் போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைப் பணியாளா்களும் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைப் பணியாளா்களும் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும், கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தேவையான அளவு கிருமி நாசினி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சுழற்சி முறையில் வழங்கி கடைகளில் கூட்டம் அதிகம் சேருவதைத் தவிா்க்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பனைத் தவிா்க்கும் விதமாக தனிமைப்படுத்துதல் எனும் நடைமுறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தனிமைப்படுத்துதல் நடைமுறை: நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கும், மற்றொரு அட்டைதாரருக்கும் இடையிலான இடைவெளி ஒரு மீட்டா் இருக்கும் வகையில் கோடுகள் வரைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் ஒரு மீட்டா் இடைவெளியில் அந்த கோடுகளில் நிற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

No comments:
Post a Comment