கரோனா எதிரொலி: மத்திய அரசின் உதவி வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 20, 2020

கரோனா எதிரொலி: மத்திய அரசின் உதவி வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு


கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு உதவி வாட்ஸ்ஆப் எண்ணை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம், உங்களுக்கு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் +91 90131 51515 என்ற எண்ணை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் கரோனா உதவி எண்ணாக இந்த எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு நமஸ்தே என்று தகவல் அனுப்பினால் உங்களுக்குத் தேவையான தகவல்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை தெரிவித்தது.

அதே சமயம் இந்தியாவில் இதுவரை கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இன்று காலை நிலவரப்படி 195 பேருக்கு இந்தியாவில் கரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது தற்போது 206 ஆக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா அறிகுறி மற்றும் கரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்கள் என சென்னையில் மட்டும் 1,800க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மார்ச் 22ம் தேதி இந்தியா முழுவதும் 'மக்கள்-ஊரடங்கு' உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment