சனிக்கிழமை பள்ளி வேலை நாளா அல்லது விடுமுறை நாளா என்று அறிவிப்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தாமதப்படுத்துவதால் அவர்களை ஆசிரியர்கள் வேதனையோடு கலாய்த்து வருகிறார்கள்.
தமிழக தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை சரிகட்ட சனிக்கிழமை பள்ளிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து கல்வி மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.
வாட்ஸ்ஆப் மற்றும் அலைபேசி மூலமாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறிவிப்பில் குளறுபடியும் தாமதமும் நடப்பதால் ஆசிரியர்களும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியில் இருந்து 5:00 மணிக்குள் தான் இதற்கான உத்தரவு தங்களுக்கு கிடைப்பதாகவும், இதனால் பள்ளி வேலை நாள் அல்லது விடுமுறை நாள் என்பதை மாணவர்களுக்கு அறிவிப்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும் புலம்புகிறார்கள்.
ஒரு சில வாரங்களில் எந்த அறிவிப்பும் வராத நிலையில் விடுமுறை என்று அறிவித்து ஆசிரியர்களும், மாணவர்களும் வீடுகளுக்கு சென்ற பிறகே பள்ளி வேலை நாள் என்ற அறிவிப்பு வருகிறது. அதற்கு பிறகு ஆசிரியர்கள் கிராமத்துக்கு சென்று மாணவர்களை வீடு வீடாக அணுகி சனிக்கிழமை பள்ளி உண்டு என்று அறிவிக்க வேண்டியுள்ளது.
இன்னும் சில நேரங்களில் தெளிவில்லாத உத்தரவுகளால் வேலை நாள் என்று ஆசிரியர்கள் சொல்லியனுப்பி, மறு நாள் விடுமுறை விட்ட சம்பவங்களும் உண்டு. இதனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை அறிவிப்பு வருமா.. வராதா என்பது குறித்து ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளை சமூக ஊடகங்களில் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன்:
விடுமுறை அறிவிப்பதில் பல்வேறு குளறுபடி உள்ளது.
தொடக்கக்கல்வியை பள்ளிக் கல்வியுடன் இணைத்தபிறகு பள்ளி வேலை நாட்களை அறிவிப்பதில் முரண்பாடு நிலவுகிறது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் வரும் வேலை நாள் குறித்த அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
விடுமுறை குறித்து கல்வித்துறை தெளிவான அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும், என்றார்.

No comments:
Post a Comment