தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?. முதல்வர் பழனிசாமி பதில்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?. முதல்வர் பழனிசாமி பதில்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளி தேர்வு குறித்து ஆலோசிக்க முடியும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment