இந்த மாநிலத்தில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 28, 2020

இந்த மாநிலத்தில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

KORONA எதிரொலியாக மணிப்பூரில் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கல்வி ஆணையர் ரஞ்சித் சிங் கூறுகையில்,

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில்,  மணிப்பூரில் 2019-20 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

இதையடுத்து,  தேர்வின்றி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதத்தில் மணிப்பூர் உயர்நிலை கல்வி கவுன்சில் நடத்திய 11-ஆம் வகுப்புக்கான தேர்வில், ஐந்து பாடங்களின் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment