கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்தா? - உலவும் 1914 ஆம் ஆண்டு தமிழ் நூல் பக்கம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 1, 2020

கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்தா? - உலவும் 1914 ஆம் ஆண்டு தமிழ் நூல் பக்கம்!

தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வருகின்றன.

பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


ஆனால், போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள் யாவும் விராகநிடை என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று,

 கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு, நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று.

இவைகளை உலர்த்தி யிடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து மேற்படி இருவகைகொ....

நூலின் முதல் - தலைப்புப் பக்கத்தில் கைமுறை பாக்கெட் வயித்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவை பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று,


பூவிருந்தவல்லி பூ.சு.துளசிங்கமுதலியாரது சுந்...ாச அச்சுக்கூடத்திற் ....ப்பிக்கப்பட்டது. 1914 - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. எனினும், குறிப்பிட்ட இரு பக்கங்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுகின்றன.

உள்ளபடியே நூல் இருப்பதும் நூலில் இருக்கும் தகவல்களும் சரியே. ஆனால், கோரோசன, கோரோன ஆக்கப்பட்டதும் அதைக் கொண்டுவந்து கொரோனாவுடன் சேர்த்ததும்தான் கோளாறு!

ம். இப்படியெல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்க்க முயல வேண்டுமா, என்ன?
Source:Dinamani website
மேலே உள்ள புகைப்படம் ஒரு WHATSAPP குழுவில் வந்த பதிவு

No comments:

Post a Comment