3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 29, 2020

3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் நாளை (ஏப்.,30) மட்டும், காலை 6 மணி முதல் 5 மணிவரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கை: சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (ஏப்.,29) இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை (ஏப்.,30) மட்டும், பொதுமக்கள் அத்யாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.


மே 1ம் தேதி முதல் மேற்கண்ட அத்யாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.


கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவும் என்பதால், பொதுமக்கள் அத்யாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாகவும், பொறுமை காத்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment