மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் சிறை : நகராட்சி ஆணையர் அதிரடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 12, 2020

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் சிறை : நகராட்சி ஆணையர் அதிரடி

வீட்டிலிருந்து வெளியே வரும் நபர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.5,000 அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அகமதாபாத் நகராட்சி தெரிவித்துள்ளது

.இந்நிலையில் நாளை மறுநாளுடன் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிவடையவுள்ளதால், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து பல்வேறு மாநிலங்களும் காத்திருக்கின்றன.

இதற்கிடையே மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளன. சில மாநிலங்கள் ஊரடங்கை கடுமையாக்கியுள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகர ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அகமதாபாத்தில் நாளை காலை 6 மணிக்குப் பின்னர் வீட்டியிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு அணியத் தவறும் நபர்களுக்கு ரூ.5,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment