56 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1000.. நெகிழவைத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 28, 2020

56 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1000.. நெகிழவைத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்..

நாகை மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நாராயண நாயக்கன் சாவடியில் அரசு உதவி பெரும் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் வீரராகவன் மற்றும் ஆசிரியைகள் சிவகாமசுந்தரி, சித்திரா, ஜெயலலிதா ஆகிய 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.


இந்த பள்ளியில் 56 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

அக்குழந்தைகளின் குடும்பங்கள் வறுமையில் இருப்பது குறித்து ஆசிரியர்கள் சிந்தித்துள்ளனர்.

பின்னர் பள்ளியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்களும், 56 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.


இதைத்தொடர்ந்து, 4 ஆசிரியர்களும் பணத்தை பங்கிட்டு பள்ளி குழந்தைகள் ஒவ்வொரின் குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாயை அளித்துள்ளனர். 

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும் வீட்டில் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் பொழுதைப்போக்கி வரும் நிலையில், ஏழைக் குழந்தைகளின் குடும்பத்திற்காக உதவி செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment