மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்" அதிரடி காட்டும் மாநிலம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 29, 2020

மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்" அதிரடி காட்டும் மாநிலம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவின் வயாநாடு மாவட்டம் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது. அதாவது ஊரடங்கின்போது முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றினால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வயாநாடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.இளங்கோ "பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் யாரேனும் சுற்றித் திரிவதை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைஸர்கள் இல்லாமல் இருந்தால் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment