பொதுத்தேர்வு விடைத்தாள் பாதுகாப்பு: உறுதிப்படுத்த கல்வித்துறை அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

பொதுத்தேர்வு விடைத்தாள் பாதுகாப்பு: உறுதிப்படுத்த கல்வித்துறை அறிவுரை

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருப்பதை கல்வித்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்த கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.




பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கியது


. பொதுத்தேர்வு நிறைவு பெறுவதற்குள், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு துவங்கியதால், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு மட்டுமே முழுமையாக நடந்தது. மேல்நிலைத்தேர்வு முடிந்து சில நாட்களிலேயே, மதிப்பீடு பணிகள் துவக்கப்பட்டிருக்கும். 



தற்போது, வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.விடைத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களில், சேகரிக்கப்பட்டு விடைத்தாள்களுக்கான 'நோடல்' மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.


 விடைத்தாள்கள், பாதுகாப்பாகவும், பூச்சிகள் அரிக்காமலும் இருப்பதை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தியுiள்ளது



.முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு, இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், விடைத்தாள்கள், லுார்து மாதா பள்ளியில், வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, நோடல் மையத்தை பார்வையிட்டார். விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கிருமி நாசினி பவுடர் துாவப்பட்டுள்ளது

No comments:

Post a Comment