வாட்ஸ்அப்" செயலியில் பல்கலைக்கழக தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 16, 2020

வாட்ஸ்அப்" செயலியில் பல்கலைக்கழக தேர்வு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு இன்று வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை   ஒத்திவைத்துள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இருக்கும் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று வாட்ஸ்அப் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது.

ஆனால் இது இறுதித் தேர்வு இல்லை; அதனால் பயப்பட தேவையில்லை என பல்கலைக்கழகம் விளக்கமும் அளித்திருக்கிறது.

ஆனால் இதுபோன்ற முறையில் தேர்வுகளை நடத்துவதற்கு உயர் கல்வித் துறை எந்தவொரு வழிமுறையையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


 இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று மிட் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது. பி.காம் படிக்கும் மாணவர்களுக்கு பிடிஎஃப் வகையில் கேள்விகள் அனுப்பப்படும். மாணவர்கள் கேள்விகளுக்கு அதிலேயே பதில்களை எழுதி, மீண்டும் பிடிஎஃப் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாணவர் ஒருவர் "இந்த வகையில் தேர்வுகளை நடத்துவது முறையல்ல, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தை வாட்ஸ்அப் பல்கலைக்கழகமாக மாற்ற, துணை வேந்தர் முயற்சிப்பதாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


 மேலும் பீகாரில் சில கிராமங்களில் இணையதள வசதி சரியாக கிடைப்பதில்ல; அவர்களால் எப்படி இந்தத் தேர்வை எழுத முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்

No comments:

Post a Comment