அண்ணாமலைப் பல்கலை: பேராசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

அண்ணாமலைப் பல்கலை: பேராசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என்று துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்விற்குத் தயாராவதற்குப் பாடப் புத்தக குறிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதற்கு அந்தந்த துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாடக் குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்


சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக ஆண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment