டிடி தொலைக்காட்சியில் பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, April 11, 2020

டிடி தொலைக்காட்சியில் பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், டிடி யாதகிரி தொலைக்காட்சி மூலமாக சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 இந்த தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், மாணவர்களின் அடுத்தக்கட்ட கல்வியை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தீர்மானிப்பதால், இதனை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதே போல், மற்ற மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என்று தகவல்கள் வந்துள்ளது.இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், வீட்டிலிருந்தே பாடங்கள் படிப்பதற்கு டிடி யாதகிரி தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

 அதன்படி, டிடி யாதகிரி தொலைக்காட்சியில் ஏப்ரல் 12 முதல் 23 ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 43 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளவதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

 இதனிடையே டிடி யாதகிரி தொலைக்காட்சியில் 10 ஆம் வகுப்புகள் ஒளிப்பரப்புவது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது

No comments:

Post a Comment