ஆன்லைனில் வகுப்பு கொரோனா விடுமுறையிலும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

ஆன்லைனில் வகுப்பு கொரோனா விடுமுறையிலும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்பு கையாளும் முயற்சியில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் களமிறங்கியுள்ளன.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்திலே, கல்வியாண்டு துவங்கி விடும்.மே மாதம் கோடை விடுமுறையாக அறிவித்து, பின் ஜூன் மாதத்தில் இருந்து, வகுப்புகள் கையாளப்படும்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதோடு, பிற வகுப்புகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால், பள்ளிகள் திறப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள், வரும் கல்வியாண்டில் சந்திக்கப்போகும் நெருக்கடியை நினைத்து தவிக்கின்றனர்.தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. நெட்வொர்க் தொடர்பு கிடைக்காத மாணவர்களுக்கு, கல்வி இணையதள முகவரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


இதுகுறித்து, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் கிரிஸ் ஈஸ்வரன் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், பள்ளிகள் திறக்க அனுமதிக்கும் பட்சத்தில், மே மாதம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வகுப்பு நடத்த திட்டமிட்டு, பாட வாரியாக கால அட்டவணை தயாரித்துள்ளோம். 


''நெட்வொர்க் பிரச்னையால், மாணவர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் உள்ளது. ''ஆன்லைன் வகுப்பு நடத்த முடியாத பட்சத்தில், மாற்று ஏற்பாடுக்கு ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.கோவை புலியகுளம், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'சி.பி.எஸ். இ., இணையதளத்தில், பாடத்திட்டம் சார்ந்த தகவல்கள் உள்ளன. 'கல்வியாண்டு துவங்கியதால், புதிய வகுப்புக்கான புத்தகங்கள் மாணவர்களிடம் உள்ளன. 'தீக் ஷா' செயலி மூலம், பாடத்தலைப்பை உள்ளீடு செய்து, தகவல்களை குறிப்பு எடுத்து கொள்ளலாம். இது தவிர, ஸ்வயம் (www.swayam.gov.in) இணையதளத்தில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒர்க்சீட், வினாவங்கி உள்ளதால், பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம்' என்றார்.

SOURCE :DINAMALAR WEBSITE

No comments:

Post a Comment