நான் ஸ்டிக்' பாத்திரங்கள் ஆபத்தா..? பயன்படுத்துவது எப்படி தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

நான் ஸ்டிக்' பாத்திரங்கள் ஆபத்தா..? பயன்படுத்துவது எப்படி தெரியுமா?


இன்று உலக அளவில் 'நான் ஸ்டிக்' பாத்திரங்கள் இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனெனில் அவ்வகை பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைத்து முடிக்கலாம். குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர்.


ஆனால் இது ஆரோக்கிய முறையில் அணுகினால் ஆபத்து என்ற வார்த்தை முன் வைக்கப்படுகிறது. உண்மையிலேயே இது ஆபத்தா..?

நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே 2013 ஆண்டு அந்த கெமிக்கல் அல்லாமலேயே நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டன.

எனவே இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது என்கிறனர்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..?


அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது. மீடியம் தீயில் சமைக்க வேண்டும். வெறும் பாத்திரத்தை நீண்ட நேரம் தீயில் வைக்கக் கூடாது.பிளாஸ்டிக், மரத்தினால் செய்யப்பட்ட என கீரல் விழாத கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும்.

துடைக்கவும், கழுவவும் மென்மையான துணி, ஸ்பாஞ்சுகள் கொண்டே துடைக்க வேண்டும். கம்பி நார் பயன்படுத்துதல், அழுத்தி தேய்த்தல் தவறு.

மேலே உள்ள கோட்டிங் உறிந்து வருவதுபோல் அல்லது உடைவது போல் இருந்தால் உடனே புதிதாக மாற்றிவிடுங்கள்.

மாற்று வழி :


இருப்பினும் உங்களுக்கு நான் ஸ்டிக்கில் சமைப்பது பிடிக்கவில்லை எனில் ஸ்டீல் பாத்திரங்கள், அலுமினியம், பித்தளை பாத்திரங்கள், மண் சட்டிகளைப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment