உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 30, 2020

உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .?

உழைப்பாளர்கள் தினத்தை வருடந்தோறும் மே 01-ம் தேதிகொண்டாடி வருகிறோம்.


உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கொண்டாடப்படும் தினம் தான் உழைப்பாளர்கள் தினம். வருடம் 365 நாளில் எல்லா நாளும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் மே 01-ம் தேதி மட்டும் தான் உழைப்பாளர் தினம் என்று செல்லுகிறார்கள்.



அது ஏன்..? உங்களுக்கு தெரியுமா...? இப்போ நம்ம எங்க வேலை பார்த்தாலும் 8 மணி நேரம் தான் வேலை. ஆனா 1800-ம் ஆண்டுகளில் 18 நேரத்திலிருந்து 20 மணி நேரம் வேலை செய்வாங்க. அதுக்கப்புறம் கவர்மெண்ட்ல வேலை செய்றவங்க 10 மணி நேரம் தான் வேலை செய்யணும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்.


ஆனால், இந்த பத்து மணி நேரத்தையும் குறைக்க வேண்டும் என தொழிலாளர்கள் ஒரு போராட்டம் செய்தார்கள். இதனால், முதலாளிகள் எல்லாருமே இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பல முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து ஹேமார்க்கெட் என்ற இடத்தில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய போராட்டம் நடத்தினார்கள்.


இந்த போராட்டத்தில் நிறைய பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் 1988 -ம் ஆண்டு அமெரிக்காவில் கூடின தொழிற்சங்கங்கள் தொழில் கூட்டு மாநாட்டில் 8 மணி நேரம்தான் வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.பின்னர் 1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மே 1-ஆம் தேதியும் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடும் என முடிவு செய்யப்பட்டது.


சுமார் 80 நாடுகளில் மே தினத்தை விடுமுறையோட தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்தியாவில் தோழர் சிங்காரவேலர் தலைமையில் 1923 -ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொருவரும் மே 1 -ம் தேதி உழைப்பாளர் ஏன் கொண்டாடுகிறோம் என கண்டிப்பா தெரிந்துஇருக்க வேண்டும்

No comments:

Post a Comment