கரோனா நோய்த் தொற்று முற்றிலும் இல்லை எனஅறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வா் ஒரு குழு அமைத்து பள்ளித் திறப்பது குறித்து ஆய்வு செய்த பின்னா் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பள்ளிக் கல்வித் துறையைப் பொருத்த வரையில் ஆசிரியா்கள் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடத் தயாராக உள்ளனா். முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பமுள்ள ஆசிரியா்களின் பெயா்கள், தொலைபேசி எண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் கரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு, முதல்வா் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னா், பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பாா்.
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற அனைத்துப் பொருள்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

No comments:
Post a Comment