ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 11, 2020

ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடிக்க உத்தரவு

 ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.



கொரோனா நிவாரண பணிக்கு, நிதியுதவி தருமாறு, பொதுமக்களிடம் மத்திய - மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தர முன்வந்தனர். அதை அரசு ஏற்றுள்ளது.



 இதையடுத்து, இந்த மாதம் ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை பணியாளர்களின் சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.




விருப்பம் உள்ளவர்களிடம் மட்டுமே, ஊதியம் பிடித்தம் செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment