மாஸ்க் அணிவதை கேலி செய்த இளைஞருக்கு கொரோனா - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

மாஸ்க் அணிவதை கேலி செய்த இளைஞருக்கு கொரோனா

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாஸ்க் அணியுமாறு வலியுறுத்துவதை, கேலி செய்து டிக்டோக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கொரோனா பரவுவதை தடுக்க பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிவதுடன், சமூக விலக்கலை கடைப்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை 25 வயது இளைஞர் ஒருவர், இருமல் மற்றும் சளி பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.அவர், எந்த வித பயண வரலாறும் இல்லாத நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது

. இளைஞனின் உடல்நிலை சீராக இருப்பதாக சாகர் பண்டல்காண்ட் மருத்துவ கல்லூரி டீன் ஜி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார்.டிக்டோக்கில் கேலி செய்த இளைஞர்:முன்னதாக சமூகவலைதளமான டிக்டோக்கில் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் இதே இளைஞரிடம், மற்றொருவர் மாஸ்க் அணியுமாறு கூறுகிறார். அதனை மறுக்கும் இளைஞர், 'ஒரு துணியை ஏன் நம்ப வேண்டும்.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது,' என டயலாக் அடிப்பார். பின்னணியில் ராக்ஸ்டார் படத்தின் இசையுடன், மாஸ்க் துணியை வேண்டாமென வீசியெறிவார்.


இந்த வீடியோவை டிக்டோக்கில் பதிவேற்றவே, இளைஞரின் அறியாமையை பலரும் கிண்டல் செய்தனர். கொரோனா உறுதியான பின்னரும் அடங்காத இளைஞர், மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து, தனக்காக கடவுளிடம் வேண்டுமாறு டிக்டோக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகிகள், அவனிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment