மின் வாரிய தேர்வு எப்போது? - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

மின் வாரிய தேர்வு எப்போது?

 ஊரடங்கு காரணமாக, தமிழக மின் வாரியத்தில், 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழக மின் வாரியத்தில், கணக்கீட்டாளர் பதவியில், 1,300; இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில், 500; உதவி பொறியாளர் பதவியில், 600 என, மொத்தம், 2,400 பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்காக, பட்டதாரிகளிடம் இருந்து, பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை, இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கணக்கீட்டாளர் பதவிக்கு, 79 ஆயிரம்; உதவியாளர் கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். உதவி பொறியாளர் பதவிக்கு மட்டும், அதிகபட்சமாக, 1.03 லட்சம், இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்ஊரடங்கு காரணமாக, மேற்கண்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கும், இம்மாதம் முதல் மே வரை, கணினி வழியான எழுத்து தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. அந்த தேர்வில், அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, அரசு இட ஒதுக்கீட்டின் படி, வேலை வழங்கப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மே, 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


இதனால், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பட்டதாரிகள், வாரிய இணையதளத்தில் உள்ள தேர்வுக்கான பாட திட்டங்களை, நன்கு படித்து, தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம். மே இறுதியில், தேர்வு தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment