தோட்டக்கலை படிப்புஆன்லைனில் வகுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 9, 2020

தோட்டக்கலை படிப்புஆன்லைனில் வகுப்பு

 தோட்டக்கலை படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் துவங்கி உள்ளன.தோட்டக்கலை துறை வாயிலாக, இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான பயிற்சி மையங்கள், சென்னை மாதவரம்; திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம்; கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இடங்களில் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும், 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, விரைவில் தேர்வுகள் நடக்கவுள்ளன. 
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிற்சி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் வாயிலாக, இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.


நாள்தோறும், 50 மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் துவங்கி, நடந்து வருகிறது. வேளாண்துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர், சுப்பையன் உத்தரவின்படி, இதற்கான பணிகளில் தோட்டக்கலை பயிற்சி மைய ஆசிரியர்கள், கவனம் செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment