திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் ஏப்ரல் 7, 8-ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.


கரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே பொதுமக்கள் கூடுவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்து வருகின்றனர்.

இதனால், கரோனா நோய்த்தொற்று பரவுவது அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ஏப்ரல் மாத பௌர்ணமி செவ்வாய்க்கிழமை (ஏப்.7) காலை 11.21 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை (ஏப். 8) காலை 8.53 மணிக்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் தடையை மீறி கிரிவலம் வந்தால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


எனவே, திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஏப்ரல் மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதித்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.
தடையை மீறி கிரிவலம் வரும் உள்ளூர் பக்தர்களை தடுத்து, திருப்பியனுப்ப காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment