தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - உயர்கல்வித் துறை அறிவிப்பு! - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - உயர்கல்வித் துறை அறிவிப்பு!

கல்லூரிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் கல்வியாண்டின் துவக்கத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.


கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலலைக்கழங்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய 2019-2020 கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஊரடங்கு காலம் முடிந்த பின் கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் அடுத்த 2020-2021ம் கல்வி ஆண்டின் துவக்கத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முதலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு காரணமாக தற்போது தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கான பாடங்களை ஆன்லைன் முறையில் எடுத்து வருகின்றனர். பாடக்குறிப்புகள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

உயர்கல்வித்துறையின் அறிவிப்பின் மூலம் கல்வி ஆண்டின் துவக்கத்தில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது மேலும்.தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது.இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.அன்பழகன் கூறும் போது, அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்தில் தான் மாணவர்களுக்கு இனி கல்லூரி ஜூன் மாதம் தான் திறக்கும், அவர்களுக்கு கல்லூரி தொடங்கியதும் இந்த பருவத்தேர்வுகள் நடைபெறும், தேர்வுகள் நடைபெற்ற பின்னர் தான் அடுத்த கல்வியாண்டுக்கான பாடவகுப்புகள் நடைபெற வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment