இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி?

இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது. 


தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை நீங்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க முடியும்.

 Doordarshan Tv On Go Allows Users To Watch DD Show On Mobile Without Internet Connectionகொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது.

தூர்தர்ஷன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை நீங்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.மீண்டும் ஒளிபரப்பாகும் 90's கிட்ஸ்-களின் சக்திமான், ராமாயணம்
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கை முன்னிட்டு தூர்தர்ஷனின் பிரபலமான நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 குறிப்பாக 90-களில் பிரபலமடைந்த ராமாயணம் மற்றும் சக்திமான் போன்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்யத் துவங்கிவிட்டன. இந்த நிகழ்ச்சிகளை எப்படி இணையச் சேவை இல்லாமல் உங்கள் போனில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.


இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷன் பார்க்கலாமா?


இன்டர்நெட் வசதி இல்லாமல் மொபைலில் தூர்தர்ஷன் டிவியை பார்ப்பது எப்படி? இன்டர்நெட் இல்லாமல் பொதிகை நிகழ்ச்சிகளை ஸ்மார்ட்போனில் பார்க்க முடியுமா என்று நீங்கள் சந்தேகப்படுவது எங்களுக்குத் தெரிகிறது.

சந்தேகமே வேண்டாம் உங்கள் போனில் இன்டர்நெட் சேவை இல்லாமல் DD சேனலில் மறுஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் நீங்கள் பார்த்து மகிழலாம் அதற்கு ஒரு வழி இருக்கிறது.


டிடி டிவி பயன்பாட்டின் மூலம் உங்கள் போனில் தூத்தர்ஷன்
தூர்தர்ஷன் பயன்பாடு உங்கள் போனில் லைவ் டிவி சேனலை இணையம் இல்லாமல் பார்க்க உங்களை அனுமதிக்கிறது.

தூர்தர்ஷனின் இந்த டிடி டிவி பயன்பாட்டை ஸ்ட்ரீம் செய்ய உங்களுக்கு டேட்டா தேவையில்லை. டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் பார்க்க விரும்பும் DD டிவி சேனல்களை ரேடியோவேவ் வழியாக ஸ்ட்ரீம் செய்து வழங்குகிறது.

இன்டர்நெட் வசதி இல்லாமல் ஸ்ட்ரீமிங்


தூர்தர்ஷன் TV-on-Go அம்சம், சிறந்த டிடி சேனல்களின் நேரடி தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. இதன் கீழ் உங்களுக்கு டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி ஸ்போர்ட்ஸ், டிடி பாரதி மற்றும் டிடி கிசான் போன்ற சேனல்களை தூர்தர்ஷன் ஸ்ட்ரீமிங் செய்கிறது.

 எந்தவொரு இடையூறும் இல்லாமல் அதிகபட்ச பயனர்களுக்கு இந்த சேவையை வழங்க முடியும் என்று தூர்தர்ஷன் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குவஹாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்ப்பூர், இந்தூர், அவுரங்காபாத், போபால், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்கள் மற்றும் இன்டர்நெட் சேவை இல்லாத நகரங்களில் கூட பயனர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுNo comments:

Post a Comment