தனது ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி நன்றி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 28, 2020

தனது ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு பிரதமர் மோடி நன்றி!

கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியை கவுரவப்படுத்தும் வகையில் 12ம் வகுப்பு மாணவி அவரது ஓவியத்தை வரைந்திருந்தார். 


மாணவியின் வாழ்த்து, மகத்தான வலிமையின் ஆதாரம் என மோடி அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தீபா எனும் ஆசிரியர் தனது மாணவி ஸ்வேதா என்பவர் வரைந்த மோடியின் பென்சில் ஓவியத்தை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். 


அதில், "தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒரு பென்சில் ஸ்கெட்ச் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க என்னைத் தூண்டியது," என தனது மாணவி கூறியதை பதிவிட்டு, மோடியை அடையும் வரை அவர் ஷேர் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் பதிவிட்டிருந்தார். "அவரது இந்த அன்பான மற்றும் புதுமையான செயலுக்கு ஸ்வேதாவுக்கு நன்றி தெரிவியுங்கள்.


அவரது மதிப்புமிக்க வாழ்த்துக்கள் தான் மகத்தான வலிமையின் ஆதாரம்" என மோடி நன்றி தெரிவித்து பதிலுக்கு டுவீட் செய்து, மாணவியை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்

No comments:

Post a Comment