JEE தேர்வு: வதந்தி பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 15, 2020

JEE தேர்வு: வதந்தி பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

ஜே.இ.இ., தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என, வெளியான தகவல் தவறானது' என, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.




பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வுக்கு பின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜி., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை வழியாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்படுகிறது


.இந்த ஆண்டு ஜனவரியில், ஜே.இ.இ., பிரதான தேர்வு முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்ரலில் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை மற்றும் ஊரடங்கு காரணமாக, தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜே.இ.இ., தேர்வு மேலும் தள்ளி போயுள்ளது.இந்த தேர்வு, ஜூலையில் நடத்தும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. 



இது குறித்து, தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம்: ஜே.இ.இ., பிரதான தேர்வை நடத்தும் தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜூலையில் நடத்தப்படுவதாக வெளியாகியுள்ள கால அட்டவணை போலியானது.


 இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்கள், ஜே.இ.இ., இணையதளத்தில், அவ்வப்போது வெளியிடப்படும் சரியான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஆன்லைனில் பிழைகளை திருத்துவதற்கான அவகாசத்தை, மே, 3 வரை, தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment