ரொம்ப போர் அடிக்குதா? Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 10, 2020

ரொம்ப போர் அடிக்குதா? Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்!


பிரபல கேமரா நிறுவனமான நிக்கன் தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்ற அனைத்து கேமரா ஆர்வலர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 நிக்கன் அறிவிப்பின் ஒரு பகுதியாக, தனது ஆன்லைன் புகைப்படம் வகுப்புகளுக்கான சந்தாவை ஏப்ரல் மாத இறுதிவரை இலவசமாக்கியுள்ளது.நிக்கன் நிறுவனத்தின் அறிவிப்பின் ஒரு பகுதியாக, தனது ஆன்லைன் புகைப்படம் வகுப்புகளுக்கான மாத சந்தாவை ஏப்ரல் மாத இறுதி வரை இலவசமாக்கியுள்ளது.


 வீட்டிற்குள் பொழுது போகாமல் இருக்கும் நண்பர்கள், இதை படித்து உங்கள் போட்டோகிராபி திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.புகைப்படம் மற்றும் வீடியோவைப் பற்றி இலவச வகுப்பு

புகைப்படம் மற்றும் வீடியோவைப் பற்றி அறிய ஆர்வமுள்ள எவரும் நிக்கன் ஆன்லைன் கோர்ஸ் தகவல்களை இலவசமாக அணுகுவதற்கு நிக்கன் ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஆன்லைன் வகுப்புகள் நிக்கன் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் நிக்கன் கேமராக்களில் இருக்கும் அம்சங்களை நன்கு அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்று நிக்கன் தெரிவித்துள்ளது.

இந்த இலவச ஆன்லைன் வகுப்பு ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல், இந்த ஆன்லைன் வகுப்புகள் எதுவும் இலவசமாகக் கிடைக்காது என்றும், அதன் சந்தா கட்டணம் வழக்கம்போல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிக்கன் அறிவித்துள்ளது.வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?


நிக்கன் நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு வகுப்பிற்கும் சுமார் $ 15 முதல் $ 50 வரை தனது ஆன்லைன் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கிறது.

ஆனால், இப்பொழுது ஒரு மாத காலத்திற்கு மட்டும் நிக்கன் இந்த சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசம் வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யணும்

ஆர்வமுள்ள வாசகர்கள் உங்கள் போட்டோகிராபி திறனை வளர்த்துக்கொள்வதற்கு உடனே நிக்கன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லலாம். உங்களுடைய இலவச ஆன்லைன் வகுப்புகளைப் பார்ப்பதற்கு முன்பு பயனர்கள் தங்களின் பெயர் விபரம் மற்றும் மின்னஞ்சல் முகவரி விபரம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.



உங்கள் விபரங்களைப் பதிவு செய்த பின்னர், உங்கள் வகுப்புகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம்.கேமரா அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கும் நிக்கன்

இந்த ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் சிறந்த போட்டோக்ராபர் மற்றும் நல்ல தொழில்முறை தெரிந்த நபர்களால் கற்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த வகுப்புகள் நிகான் தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன என்பதையும் தாண்டி, கேமராக்கள் படங்களை எவ்வாறு கைப்பற்றுவது என்பது உட்படப் புகைப்படத்தின் அடிப்படைகளையும் கற்பித்துகொடுக்கின்றன.

No comments:

Post a Comment