மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ONLINE பயிற்சி வகுப்பு :சென்னை IIT ஏற்பாடு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ONLINE பயிற்சி வகுப்பு :சென்னை IIT ஏற்பாடு

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி., ஏற்பாடு செய்துள்ளது.


இது குறித்து, தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் பிரச்னையால், வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள், ஆக்கப்பூர்வமான கற்றலில் ஈடுபடும் வகையில், 


அவர்களுக்கு தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கல்வி முறையான, என்.பி.டி.இ.எல்., வழியாக, ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள், 'யு டியூப்' வழியாக, இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம். 


நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த வகுப்பில், இன்பாக்ஸ் வழியாக மாணவர்கள், தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.ஊரடங்கு முடியும் வரை, ஒவ்வொரு வாரமும், ஒன்று அல்லது இரண்டு வகுப்புகள் நடக்கும்.இதில், மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு, தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள், வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.இதற்கு, என்ற, யு டியூப் தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment