வீடு தேடிவரும் வங்கிச்சேவை... SBI அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

வீடு தேடிவரும் வங்கிச்சேவை... SBI அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளதால் தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக வீடுகளுக்கு சென்று வங்கிச்சேவையை பயன்படுத்தும் முறையை எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.கொரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கிச்சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகாலத்தில் வங்கி சேவை தேவைப்படும் என்பதால் அதை உங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்துள்ளது எஸ்.பி.ஐ. இந்த சேவை தற்போது மூத்தகுடிமகன் மற்றும் மாற்றுத்திறானாளிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகள் இந்த சேவையை வழங்கி வருகிறது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், நாகான் கிளையை சேர்ந்த எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி சென்று பண வசதி வழங்குவதன் திட்டத்தை உறுதி செய்துள்ளனர்.


 இந்த தொற்று நோயை ஒன்றாக எதிர்த்து போராடுவோம்' என்று பதிவிட்டுள்ளனர்.இந்த சேவையை பெற எஸ்.பி.ஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படிவாடிக்கையாளர்கள் 1800111103 என்ற எண்ணில் வங்கி பணி நாட்களில் காலை 9 மணி முதல் 4 வரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.


இந்த சேவையை கணக்குடைய வங்கிக்கிளையில் மட்டுமே கிடைக்கும். இதற்கு சேவை கட்டணமும் வசூலிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 20000 ரூபாய்க்கு மேல் பணபரிவர்த்தனை செய்ய முடியாது.


கணக்குடைய வங்கிக்கிளையின் சுமார் 5 கி.மீ தூரத்தில் இருந்தால் மட்டுமே இந்த சேவையை பெற முடியம் உள்ளிட்ட சில கட்டுபாடுகளை எஸ்.பி.ஐ விதித்துள்ளது.

No comments:

Post a Comment