10ம் வகுப்பு மாணவருக்கு ஜூனில் வகுப்பு நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 24, 2020

10ம் வகுப்பு மாணவருக்கு ஜூனில் வகுப்பு நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த அனுமதி வழங்க, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில், கடந்த மார்ச், 27 முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், 'கொரோனா' தடுப்பு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது இரு மாதத்துக்கு பின், ஜூன், 1 முதல், தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது ஜூன், 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு, மே, 31ல் நிறைவடையும் நிலையில், 10ம் வகுப்பு மாணவருக்கு மட்டும் பாடம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மாணவருக்கு, இரு மாதத்துக்கு மேல் விடுமுறையளித்த நிலை உள்ளது. இதில் பெரும்பாலோர், படித்த பாடங்களையே மறந்து போய் விட்ட நிலையில் உள்ளனர். 


அவர்களுக்கு, சில நாளாவது வகுப்பு நடத்தினால், தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வர். பள்ளியில் அனைத்து வகுப்புக்கும் விடுமுறையளிக்கப்பட்ட நிலையில், 10ம் வகுப்பு மாணவருக்கு மட்டும், வகுப்புக்கு, 10 பேர் வீதம் கூட, பாடம் நடத்த முடியும். 

ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட வசதியை பெற முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமாவது, இதற்கான அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment