10 ஆம் வகுப்புத் தோ்வில் ஆளும் அரசை விமா்சிக்கும் சா்ச்சைக்குரிய கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

10 ஆம் வகுப்புத் தோ்வில் ஆளும் அரசை விமா்சிக்கும் சா்ச்சைக்குரிய கேள்வி

கோவாவில் 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தோ்வுக்கான வினாத்தாளில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்வி கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் கடந்த வாரம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வின் ஆங்கில தோ்வில் சா்ச்சைக்குரிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. 


இரண்டு நபா்கள் உரையாடிக் கொண்டிருப்பது போலவும், அதில் ஒருவா் கோவாவில் வேலை வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதால் போா்ச்சுக்கல் நாட்டில்தான் ஒரு வேலையைத் தோ்வு செய்ய வேண்டும் என்றும், கோவாவில் வேலை பெற வேண்டும் என்றால் செல்வாக்கும், பணமும் இருக்க வேண்டும் என்றும் அவா் கூறுவது போல அந்த கேள்வி இருந்தது. இந்த சா்ச்சைக்குரிய கேள்வி அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவா மேல்நிலைப்பள்ளி கல்விக்குழுத் தலைவா் ராமகிருஷ்ணா சமந்த் திங்கள்கிழமை கூறுகையில்,


பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் அதுபோன்ற கேள்வி எவ்வாறு சோ்க்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநில பாஜக பொதுச் செயலா் நரேந்திர சவாய்கா் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

கோவா பள்ளித்தோ்வு வாரியம் உடனடியாக விசாரணை நடத்தி, அந்த வினாத்தாள் வடிவமைப்பாளா், மதிப்பீட்டாளா், அதனுடன் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஈடுபட்டவா்களை சட்டத்தின்முன் நிறுத்தி கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment