10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 12, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை:

10 ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில்  உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன.



 இதனையடுத்து, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக  தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்விலும் ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.


இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று  அறிவித்தார். மேலும், 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். மார்ச் 26-ல் நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது


. 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம்  மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் பணி மே 27-ம் தேதி முதல் தொடங்கும் என்றார். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.


தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களுக்கு தேவையான  சுகாதார வசதிகள் செய்து தரப்படும். பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


 இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதால் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



 இது தொடர்பாக ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 1-ம் தேதிக்குள் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றால் மகிழ்ச்சி. ஏனெனில் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது கேள்விக்குறியே. 


வெவ்வேறு பள்ளிகளில் படித்து வரும் 500 முதல் 1000 மாணவர்கள் ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதுவார்கள். அறைக்கு 20 மாணவர்கள் என்றாலும் தேர்வு மையத்திற்கு வரும்போதும் தேர்வு முடித்துத் திரும்பும்போதும் சமூக இடைவெளியை எதிர்பார்ப்பது இயலாத காரியம். மேலும், 2 மாதங்களாக விடுப்பிலிருந்து நேரடியாக 10-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுதச்சொல்வது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு இது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.



எனவே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய இயலாத பட்சத்தில் கொரோனா முடிவுக்கு வந்த பிறகே தேர்வு நடத்தவேண்டும். அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப் பயிற்சிக்கு என பள்ளி திறந்து 2 வாரங்களுக்குப் பிறகு தேர்வு வைத்தால் மட்டுமே மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.

அதேபோல 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி அளவில் தேர்ச்சியளித்திட வேண்டும். மேலும் +2 விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்து ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment