10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை! - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 24, 2020

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர்.


 அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஊரடங்கு அமலில் இருப்பினும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியான பின்னரே மாணவ சேர்க்கை நடைபெறும் 



என்றும் அதற்கு முன்னர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment